ரெடிமேட் குழம்புபொடி தயாரிப்பது எப்படி?


தேவையான பொருட்கள்:

மிளகு-150 கிராம்.
மல்லி-100 கிராம்ம்.
சீரகம்-100 கிராம்.

குழம்பு செய்ய தேவையான பொருட்கள் 

புளி நெல்லிக்காய் அளவு
பூண்டுப் பல் - 10
மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு தேவையான அளவு.

செய்முறை:

மிளகு, மல்லி, சீரகம் இவற்றை ஒன்றாக மிக்ஸியில் நைசாக அரைக்கவும். குழம்பு தேவைப்படும் போது ஒரு பாத்திரத்தில் புளியை கெட்டியாகக் கரைத்து ஊற்றி உப்பு, மஞ்சள் தூள் அரைத்து வைத்திருக்கும் ரெடிமேட் குழம்புப் பொடி (தேவைக்கு ஏற்ப )ஆகியவற்றை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். எண்ணெயில் பூண்டை நன்றாக வதக்கி குழம்பில் சேர்த்து இறக்கவும்.
இந்த ரெடிமேட் குழம்புப் பொடி ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும். தேவைக்கு ஏற்ப அரைத்து வைத்துக் கொள்ளலாம்.

               நன்றி.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நட்பு கிரகங்கள்.

பகை கிரகங்கள்.

நவகிரகங்களுக்கு ஏற்ற நிறங்கள்