பலாப்பழ அப்பம்.
தேவையான பொருட்கள் :
பச்சரிசி-200 கிராம்.புழுங்கலரிசி -200கிராம்.
பலாச்சுளை -30 எண்ணிக்கை.
வெல்லம்-500 கிராம்.
தேங்காய் துருவியது--1 கப்.
உப்பு-தேவையான அளவு.
செய்முறை:
- பச்சரிசி, புழுங்கலரிசி இரண்டையும் ஒன்றாக கலந்து இரண்டு மணி நேரம் ஊறவைத்து உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- கரகரப்பாக அரைத்த மாவுடன் பலாசுளைகளை துண்டுதுண்டாக நறுக்கி அதனுடன் வெல்லத்தை பொடி செய்து சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
- மாவை வழித்தெடுத்து தேங்காய் துருவல் சேர்த்து மாவை ஒன்றாக கலக்கவும்.
- தோசைக்கல்லை அடுப்பில் வைத்து இரண்டு கரண்டி எண்ணெய் ஊற்றி மாவை அப்பமாக ஊற்றவும்.
- சூடாக சாப்பிட சுவையான பலாச்சுளை அப்பம் தயார். நன்றி.
கருத்துகள்
கருத்துரையிடுக