மீன் குழம்பு

தேவையான பொருட்கள்:

மீன்-1/2 கிலோ.
மிளகாய் தூள்-2 ஸ்பூன்.
மல்லித்தூள்-2 ஸ்பூன்.
மஞ்சள் தூள்-1/2 ஸ்பூன்
தக்காளி-150 கிராம்.
வெங்காயம்-150 கிராம்.
புளி கரைசல் - தேவையான அளவு.
இஞ்சி, பூண்டு - 50 கிராம்.
கொத்தமல்லி இலை - கிறிதளவு.
அரிசி வடகம் - தேவையான அளவு.
உப்பு - தேவையான அளவ.

செய்முறை:

மீனை நன்றாக சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக கட் பண்ணவும்.கட் பண்ணிய மீன் துண்டுகளில் மிளகாயத்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து5 நிமிடம் பிசறி வைக்கவும். வடகத்தை
ப் போட்டு தாளிக்கவும். வெங்காயத்தை வதக்கவும். அடுத்து தக்காளியை வதக்கவும். பின்பு மிளகாய்த்தூள், மல்லித்தூள்,உப்பு போட்டு வதக்கவும்.
சிறிது தண்ணீர் ஊற்றி மசாலா வாசம் போகும் வரை வதக்கவும். புளி கரைசல் ஊற்றவும். கொதி வந்ததும் மீன் துண்டுகளைப் போடவும். கடைசியாக கொத்தமல்லி இலை போட்டு இறக்கவும். சுவையான மீன் குழம்பு தயார்.

             நன்றி.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நட்பு கிரகங்கள்.

பகை கிரகங்கள்.

நவகிரகங்களுக்கு ஏற்ற நிறங்கள்