வெஜிடபுள் சாலட்
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் துருவியது- 1கப்வெள்ளை முள்ளங்கி துருவியது-1 கப்
காரட் துருவல்-1 கப்
முட்டைகோஸ் துருவல்-1 கப்
தக்காளி-1
பெரிய வெங்காயம்-1
வெள்ளரி பிஞ்சு-3
பொடியரக நறுக்கிய இஞ்சி-2 மேஜை கரண்டி
பச்சை மிளகாய்-6
எலுமிச்சை சாறு-2 மேஜை கரண்டி
மிளகுத்தூள் - தேவையான அளவு
கொத்தமல்லி இலை- சிறிதளவு
தயிர் -தேவையான அளவு
தேவையான அளவு உப்பு
செய்முறை:
பச்சை மிளகாய், வெள்ளரி பிஞ்சு, தக்காளி, பெரிய வெங்காயம் ஆகியவற்றை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிக் கொள் வைும். இத்துடன் துருவிய காரட், பீட்ரூட், முள்ளங்கி முட்டைகோஸ் ஆகியவற்றை சேர்க்கவும். வாய் அகன்ற பாத்திரத்தில் இவற்றை பரப்பி மிளகுத்தூள், எலுமிச்சை சாறு ,கொத்தமல்லி இலை ஆகியவற்றுடன் தயிரை ஊற்றி தேவையான அளவு உப்பு சேரக்கவும். சுவையான வெஜிடபுள் சாலட் தயார்.நன்றி.
கருத்துகள்
கருத்துரையிடுக