இடுகைகள்

அக்டோபர், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கதிர் அறுக்க உகந்த நட்சத்திரங்கள்

கதிர் அறுக்க உகந்த நட்சத்திரங்கள் 1.பரணி 2.ரோகிணி 3.மிருகசீரிடம் 4.திருவாதிரை 5.பூசம் 6.மகம் 7.உத்திரம் 8.அஸ்தம் 9.விசாகம் 10.அனுஷம் 11.உத்திராடம் 12.திருவோணம் 13.உத்திரட்டாதி 14.ரேவதி

இறால் சூப்

தேவையான பொருட்கள் இறால் - 100 கிராம். சோள மாவு - 1/2 டீஸ்பூன். இஞ்சி விழுது - 1 டீஸ்பூன். பூண்டு விழுது - 1 டீஸ்பூன். மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன் வெங்காயத்தாள்-சிறிதளவு. வெங்காயம் - 1 கொத்தமல்லி - சிறிதளவு. சோயா சாஸ் - 1 டீஸ்பூன். சில்லி சாஸ் - 1 டீஸ்பூன். மஞ்சள்தூள் தேவையான அளவு. உப்பு தேவையான அளவு. செய்முறை இறாலை மஞ்சள்தூள் உப்பு சேர்த்து சுத்தம் செய்து வைக்கவும். சோளமாவில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்துவைக்கவும்.கொத்தமல்லி, வெங்காயத்தாள், வெங்காயம் இவற்றை பொடியாக நறுக்கி வைக்கவும்.சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது ஆகியவற்றை வதக்கி இதனுடன்  இறாலைச் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.பின்னர் சோயா சாஸ், சில்லி சாஸ், மிளகுத்தூள் ஆகியவற்றை தேவைக்கேற்ப சேர்த்துக்கொள்ளவும். இறால் வெந்ததும் கரைத்து வைத்த சோளமாவை ஊற்றி ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி, வெங்காயத்தாள் சேர்த்து இறக்கவும். இறால் சூப் தயார்.

ரெடிமேட் குழம்புபொடி தயாரிப்பது எப்படி?

தேவையான பொருட்கள்: மிளகு-150 கிராம். மல்லி-100 கிராம்ம். சீரகம்-100 கிராம். குழம்பு செய்ய தேவையான பொருட்கள்  புளி நெல்லிக்காய் அளவு பூண்டுப் பல் - 10 மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன எண்ணெய் - தேவையான அளவு உப்பு தேவையான அளவு. செய்முறை: மிளகு, மல்லி, சீரகம் இவற்றை ஒன்றாக மிக்ஸியில் நைசாக அரைக்கவும். குழம்பு தேவைப்படும் போது ஒரு பாத்திரத்தில் புளியை கெட்டியாகக் கரைத்து ஊற்றி உப்பு, மஞ்சள் தூள் அரைத்து வைத்திருக்கும் ரெடிமேட் குழம்புப் பொடி (தேவைக்கு ஏற்ப )ஆகியவற்றை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். எண்ணெயில் பூண்டை நன்றாக வதக்கி குழம்பில் சேர்த்து இறக்கவும். இந்த ரெடிமேட் குழம்புப் பொடி ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும். தேவைக்கு ஏற்ப அரைத்து வைத்துக் கொள்ளலாம்.                நன்றி.

வெஜிடபுள் சாலட்

தேவையான பொருட்கள்: பீட்ரூட் துருவியது- 1கப் வெள்ளை முள்ளங்கி துருவியது-1 கப் காரட் துருவல்-1 கப் முட்டைகோஸ் துருவல்-1 கப் தக்காளி-1 பெரிய வெங்காயம்-1 வெள்ளரி பிஞ்சு-3 பொடியரக நறுக்கிய இஞ்சி-2 மேஜை கரண்டி பச்சை மிளகாய்-6 எலுமிச்சை சாறு-2 மேஜை கரண்டி மிளகுத்தூள் - தேவையான அளவு கொத்தமல்லி இலை- சிறிதளவு தயிர் -தேவையான அளவு தேவையான அளவு உப்பு செய்முறை: பச்சை மிளகாய், வெள்ளரி பிஞ்சு, தக்காளி, பெரிய வெங்காயம் ஆகியவற்றை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கிக் கொள் வைும். இத்துடன் துருவிய காரட், பீட்ரூட், முள்ளங்கி முட்டைகோஸ் ஆகியவற்றை சேர்க்கவும். வாய் அகன்ற பாத்திரத்தில் இவற்றை பரப்பி மிளகுத்தூள், எலுமிச்சை சாறு ,கொத்தமல்லி இலை ஆகியவற்றுடன் தயிரை ஊற்றி தேவையான அளவு உப்பு சேரக்கவும். சுவையான வெஜிடபுள் சாலட் தயார்.   நன்றி.