இறால் வறுவல்.
தேவையானபொருட்கள்:
இறால் -250 கிராம்.
முட்டை-3
எலுமிச்சைப் பழம்-1
வெங்காயம்-150 கிராம்.
தக்காளி-50 கிராம்.
பச்சை மிளகாய்-6
கொத்தமல்லி-1 கட்டு.
மிளகு-3 தேக்கரண்டி.
மஞ்சள் தூள்-1 தேக்கரண்டி.
மிளகாய்த்தூள்-1 தேக்கரண்டி.
எண்ணெய்-150 மில்லி.
உப்பு-தேவையானஅளவு.
செய்முறை:
இறாலை மிளகு சேர்த்தஎலுமிச்சை சாறுடன் ஊறவைக்கவும். அதை உடைத்தமுட்டையில் தோய்த்து எண்ணெய்யில் வறுக்கவும்.
வெங்காயம், தக்காளி நறுக்கவும். பச்சை மிளகாயைக் கீறி வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய்யைசூடு செய்து வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதன் பின்பு தக்காளி சேர்க்கவும். பிறகு மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் சேர்த்து கலக்கவும். அதில் வறுத்தஇறாலை போடவும். கொத்தமல்லி சேர்த்து இறக்கவும். சுவையானஇறால் வறுவல் தயார்.
கருத்துகள்
கருத்துரையிடுக