பாகற்காய் ப்ரை.
தேவையான பொருட்கள்:
பாகற்காய்- 3சிறியது.
மிளகாய் தூள்-1ஸ்பூன்.
மஞ்சள் தூள்-1ஸ்பூன்.
மைதா மாவு-4டேபிள் ஸ்பூன்.
சோள மாவு-2டேபிள் ஸ்பூன்.
பூண்டு- 6பல்
தேங்காய் துருவல்--1/4மூடி.
உப்பு-தேவையான அளவு.
எண்ணெய்--தேவையான அளவு.
செய்முறை:
பாகற்காயை நீளவாக்கில் விரல் அளவிற்கு நறுக்கிக் கொள்ளவும்.அதனுடன்மிளகாய்பொடி,மஞ்சள்பொடி,சோளமாவு,மைதா மாவு,உப்புமற்றும் நசிக்கிய பூண்டைச் சேர்க்கவும்.இவை அணைத்தையும் நன்றாக பிசறிக்கொள்ளவும்.வாணலியில் எண்ணெய்யை சூடு செய்து அதில் பிசறிய பாகற்காயை கொஞ்சம்,கொஞ்சமாக போட்டு சிவக்க வந்ததும் பொரித்து எடுக்கவும்.கடைசியாக வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு பொரித்த பாகற்காயுடன் தேங்காய் துருவளைப் போட்டு சிறிது நேரம் கிளறி இறக்கவும்.சுவையான பாகற்காய் ப்ரை தயார்.
கருத்துகள்
கருத்துரையிடுக