இடுகைகள்

ஜூலை, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

திரியக்முக நட்சத்திரங்கள்

1.அஸ்வினி. 2.மிருகசீரிடம். 3. புனர்பூசம். 4. அஸ்தம். 5. சித்திரை. 6. சுவாதி. 7. அனுஷம். 8. கேட்டை. 9. ரேவதி. இந்த நட்சத்திர நாட்களில் யானை, குதிரை, பசு, எருமை, கழுதை போன்ற நான்குகால் விலங்குகள் வாங்கலாம்.

ஊர்ந்துவமுக நட்சத்திரங்கள்

1. ரோகிணி. 2. திருவாதிரை. 3.பூசம். 4. உத்திரம். 5. உத்திராடம். 6. திருவோணம். 7. அவிட்டம். 8. சதயம். 9. உத்திரட்டாதி. இந்த நட்சத்திர நாட்களில் செடி, மரம், மதில்சுவர் கட்ட, பந்தல் அமைக்க போன்ற காரியங்களை செய்யலாம்.

அதோமுக நட்சத்திரங்கள் 1. பரணி. 2. கார்த்,திகை. 3.ஆயில்யம். 4. மகம். 5. பூரம். 6. விசாகம். 7. மூலம். 8. பூராடம். 9. பூரட்டாதி. இந்த நட்சத்திர நாட்களில் கணிதம் கற்க, குளம் வெட்ட, கிணறு தோண்ட அல்லது போர்வெல் போட, வேலி அமைக்க, தானியங்கள் சேகரிக்க போன்ற காரியங்களை செய்யலாம..