தேவையான பொருட்கள்: புழுங்கல் அரிசி-4கப். பொட்டுக்கடலை-2கப். பட்டர்-50கிராம். எள்-1மேஜைக்கரண்டி. ஓமம்-1மேஜைக்கரண்டி. பெருங்காயம்-1/2 மேஜைக்கரண்டி. மிளகாய் தூள்-1மேஜைக்கரண்டி. பூண்டு-6பல். எண்ணெய்-தேவையானஅளவு. உப்பு-தேவையானஅளவு. செய்முறை: புழுங்கல்அரிசியை நன்கு கழுவி 4மணி நேரம் ஊறவைக்கவும்.ஊறியபின்பு தண்ணீரை வடித்து விட்டு தோசைக்கு அரைப்பது போல் கிரைண்டரில் நைசாக அரைக்கவும்.அரைக்கும் போதே பூண்டு,உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளவும். பொட்டுக்கடலையை மிக்ஸியில் நைசாக அரைத்து சலித்துக்கொள்ளவும்.அரைத்த அரிசி மாவு,பொட்டுக்கடலை மாவு,மிளகாய் தூள்,எள்,ஓமம்(நசிக்கிப்போடவும்) ஆகியவற்றை நன்றாக பிசைந்து கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும்( மிதமாக தீயை வைக்கவும்)முறுக்கு அச்சில் மாவை வைத்து முறுக்கை பிழிந்தெடுக்கவும்.வாயில் போட்டவுடன் கரையும் மொறு மொறுப்பான சுவையான பட்டர் முறுக்கு தயார். நன்றி.