அன்னாசி பழத்தின் நன்மைகள்
அன்னாசி பழத்தின் சாறு மிகுந்த சுவையுடனும் அதிக சர்க்கரை உள்ளதாகவும் இருக்கும். இதில் பலவகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இதில் பொட்டாசியம் பி வைட்டமின்கள் மாங்கனீஷ் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இந்த பழச்சாற்றில் ப்ரோமெலைன் என்ற என்சைம் இருப்பதால் செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது.. உயர் இரத்த அழுத்தம், மலச்சிக்கல், மனச்சோர்வு, பதற்றம், புற்றுநோய் அபாயம், வீக்கங்கள் போன்றவற்றை நீக்குகிறது.வைட்டமின் சி அதிகம் இருக்கிறது. கடைகளில் கிடைக்கும் பழச்சாற்றில் அஸ்கார்பிக் அமிலம் சேர்ப்பதால் நோய் எதிர்ப்புசக்கியை ஊக்கப்படுத்தி வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதனால் ஹார்மோன் வளர்ச்சி அதிகரித்து உடலை காக்கும் அரணாக அன்னாசி இருக்கிறது. நாம் அன்னாசி பழத்தை உட்கொண்டு அதன் பலனை அடையலாம்.