ஓமப்பொடி

ஓமப்பொடி தேவையான பொருட்கள்: கடலைமாவு - 2 கப். அரிசிமாவு - 1 கப். வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன். மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன். மஞ்சள் கலர் பொடி - தேவையானஅளவு. பெருங்காயத்தூள் - 1/2 ஸ்பூன். ஓமம் - 1 டேபிள்ஸ்பூன். உப்பு தேவையான அளவு. செய்முறை: கடலைமாவு, அரிசிமாவு, வெண்ணெய், உப்பு, பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள் கலர் பொடி ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு கலக்கவும்.பிறகு ஓமத்தை கசக்கி நீரில் போட்டு 5 நிமிடம் ஊற விடவும்.பிறகு அந்த நீரை வடிகட்டவும். இந்த வடிகட்டிய நீரை சிறிதுசிறிதாக மாவில் ஊற்றி பிசையவும். அடுப்பை பற்றவைத்துவாணலியில் எண்ணெய் ஊற்றவும். சூடான எண்ணெய் 1 ஸ்பூன் அளவு மாவில் சேர்த்து பிசைந்துகொள்ளவும். எண்ணெய் காய்ந்ததும் அடுப்பை மிதமான சூட்டில் வைத்துக்கொள்ளவும். இடியப்ப உரலில் சிறிது எண்ணெய் தடவிக்கொள்ளவும். பிசைந்த மாவை இடியப்ப உரலில் இட்டு பிழியவும். எண்ணெய்யில் ஓசை அடங்கிய உடன் ஓமப்பொடியை எடுக்கவும். சூடான சுவையான மொறுமொறுப்பான ஓமப்பொடி தயார்.